/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மருவுக்கு தடவும் மருந்து குடித்த குழந்தை சாவு
/
மருவுக்கு தடவும் மருந்து குடித்த குழந்தை சாவு
ADDED : ஆக 24, 2025 01:20 AM
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் ராமு. இவர், தற்போது, தர்மபுரியில் வசித்து வருவதுடன், அங்குள்ள மொபைல்போன் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 20ல் தன் குடும்பத்தினருடன் ஆர்.கோபிநாதம்பட்டியில் உள்ள, தந்தை ராஜேந்திரன் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், 21ல் பகல், 12:00 மணிக்கு ராமுவின், மூன்றரை வயது மகள் கனிஷ்கா, வீட்டில் சிறிய பாட்டிலில் இருந்த, தோல் மருக்களுக்கு தடவப்படும் மருந்தை தவறுதலாக குடித்துள்ளார். அதனால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனிஷ்கா, மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று மதியம், 1:00 மணிக்கு உயிரிழந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.