ADDED : ஜூன் 17, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி:தர்மபுரி
அடுத்துள்ள புலிக்கரை காட்டுக்கொட்டாயை சேர்ந்த கட்டட மேஸ்திரி
சிவபிரகாசம், 35. இவரது மனைவி மகேஷ்வரி, 33. இந்த தம்பதிக்கு, 3
வயதில் சஷ்திமேத்ரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
வீட்டிற்கு முன் விளையாடி கொண்டிருந்த குழந்தை
மாயமானது. அக்கம் பக்கம் தேடி பார்த்தபோது, வீட்டின் அருகிலிருந்த
கிணற்றில் தவறி விழுந்திருந்த குழந்தையை மீட்டு, புலிக்கரை அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த
மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
