ADDED : நவ 22, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூச்சுத்திணறி குழந்தை சாவு
தர்மபுரி, நவ. 22-
நல்லம்பள்ளி அடுத்த இண்டூர் பாவடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 47. ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர் மனைவி பிரியா. இவர்களுக்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு இக்குழந்தைக்கு, தாய் பிரியா புட்டி பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அன்றிரவு குழந்தை இறந்தது. இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.