ADDED : மார் 17, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்தவர் அபேக்தர் சேட்பால். இவர் மனைவி திவ்யா. தம்பதியருக்கு, 4 மாத பெண் குழந்தை இருந்தது. நரிப்பள்ளியில் தன் பெற்றோர் வீட்டிலிருந்த திவ்யா, நேற்று மதியம், 2:30 மணிக்கு குழந்தைக்கு தாய்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதை-யடுத்து, அரூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.