/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி

ADDED : நவ 28, 2024 12:59 AM
அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர்
சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி
நல்லம்பள்ளி, நவ. 28-
தர்மபுரி அடுத்த, நார்த்தம்பட்டியில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள பாதாள சாக்கடை கால்வாயால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 25 குழந்தைகள் கல்வி பயில வந்து செல்கின்றனர். இந்நிலையில், நார்த்தம்பட்டி கிராமம் முழுவதும் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த அங்கன்வாடி மையம் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்கியதால், அங்கன்வாடி கட்டடம் நீரில் ஊறிய மண்ணில் இறங்கி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், தேங்கும் கழிவுநீரில் இருந்து கொசு உள்ளிட்ட பூச்சிகள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, அங்கன்வாடி மையம் அருகே அமைந்துள்ள சாக்கடை கழிவுநீர் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.