/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 15, 2024 02:15 AM
ஊராட்சி ஒன்றிய பள்ளியில்
குழந்தைகள் தின விழா
பென்னாகரம், நவ. 15-
பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். நேருவின் நினைவை போற்றும் விதமாக அவரை பற்றிய கவிதை, கட்டுரை மற்றும் ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. குழந்தைகள் தின உறுதிமொழியும் எடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் பழனி பேசுகையில், ''குழந்தைகள், நாட்டின் வருங்கால துாண்கள். கல்வி, ஒழுக்கம் உள்ளிட்டவைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, பன்முக தன்மையுடன் மிளிர வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.