/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுயம்பு காளியம்மன் கோவில் சித்திரை மாத தேர் திருவிழா
/
சுயம்பு காளியம்மன் கோவில் சித்திரை மாத தேர் திருவிழா
சுயம்பு காளியம்மன் கோவில் சித்திரை மாத தேர் திருவிழா
சுயம்பு காளியம்மன் கோவில் சித்திரை மாத தேர் திருவிழா
UPDATED : ஏப் 16, 2025 01:00 PM
ADDED : ஏப் 16, 2025 01:19 AM
அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் சுயம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாத தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான தேர்த்திருவிழா, மார்ச், 28- அன்று கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் வலம் வருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏப்., 9-ல் கும்ப பூஜை, 11-ல் கோ பூஜை மற்றும் வினாயகர் தேர் இழுத்தல், ஏப்., 12ல் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என, இரு தினங்கள் காளியம்மன் மஹாரத தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதில், திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், தேர் மீது உப்பு, மிளகு துாவி பக்தர்கள் வழிபட்டனர். இன்று பெரியதேர் நிலை அடைதல், 21ல் குதிரை வாகனத்தில் அம்மன் பந்தகாசி வீதி ஊர்வலம், 22ல் மஞ்சள் நீராட்டு விழாவும், காளியம்மன் சிலை ஊர்வலத்துடன் கோவில் விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

