/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 24, 2024 01:47 AM
தர்மபுரி, டிச. 24-
தர்மபுரி, டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் மூத்த முதல்வர் வள்ளியம்மாள் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர் ரபிக்அகமத் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜெயகாந்தம் பேசினார். விழாவில் மழலையர் பள்ளி மாணவ, மாணவியரின் கிறிஸ்துமஸ் தொடர்பான, பல்வேறு வண்ண கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடந்தன. நிகழ்ச்சியில், மழலையர் மற்றும் தொடக்க நிலை பிரிவு முதல்வர் மலர்விழி மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக யூகேஜி மாணவி பிரஜிதா ஸ்ரீ, விருந்தினரை வரவேற்றார். யூ.கே.ஜி., மாணவி சுபிக்ஷாஸ்ரீ மற்றும் பள்ளியின் துணை முதல்வர் கவிதா நன்றி கூறினர்.