/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
/
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
ADDED : டிச 26, 2025 06:07 AM

தர்மபுரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தி-லுள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. மாட்டு கொட்டகையில் கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில், குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் இடம் பெற்றன. வீடுகளிலும் ஸ்டார் தொங்க விட்டு, குடில் அலங்காரம் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து மக்கள் பண்டிகையை வர-வேற்றனர்.
தர்மபுரி துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், மறை-மாவட்ட பொருளாளர் சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு திருப்பலி நிறைவடைந்தது. மறை மாவட்ட ஆயர், கிறிஸ்தவர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கேக்குகளை பரிமாறி, கிறிஸ்-துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.இதேபோல், நல்லம்பள்ளி கோயிலுார் புனித சவேரியார் ஆலயம், செல்லியம்பட்டி அற்புத குழந்தை ஏசு ஆலயம், அரூர் கச்சேரிமேட்டில், உள்ள துாய இருதய ஆண்டவர் ஆலயம் ஆகிய இடங்களில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
* பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்-கோட்டை, பி.பள்ளிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பி.பள்-ளிப்பட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நேற்று முன்-தினம் இரவு நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் பெருந்திரளான பக்தர்கள் நள்ளிரவு வழிபாட்டில் கலந்து கொண்-டனர். இதில் பங்கு தந்தை அருள்ஜோதி வழிபாட்டை வழி நடத்-தினார். இரவு, 12:00 மணி முதல் அதிகாலை, 2:30 மணி வரை திருவழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிறகு ஒருவருக்கொ-ருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதே போன்று தென்கரைக்கோட்டை, பாத்திமாநகர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், தாளநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கொண்-டாடப்பட்டது.

