தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/துாய்மை இயக்கம் விழிப்புணர்வு

துாய்மை இயக்கம் விழிப்புணர்வு

துாய்மை இயக்கம் விழிப்புணர்வு


ADDED : மார் 13, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்கம் மூலம், துாய்மை இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட பசுமை தோழி கலைவாணி பிரியா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கு, நம்மை சுற்றி இருக்கும் இடங்களை துாய்மையாக வைத்துக் கொள்வதின் அவசியம் மற்றும் பூமியை பசுமையாக்குவதில், அனைவருக்குமான பொறுப்பு என்ன என்பது குறித்து பேசினார்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதையும், பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறம் துாய்மையாக வைத்துக் கொள்வதில், மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும் தலைமையாசிரியர் பாராட்டு தெரிவித்தார்.பள்ளியை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் குப்பையை துாய்மைப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்கினர். நிகழ்ச்சியில், ஊர்மக்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, கலைச்செல்வி, ராஜேஸ்வரி உட்பட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us