/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்
ADDED : அக் 22, 2024 01:24 AM
அரூர், அக். 22-
தர்மபுரி மாவட்டம், அரூரில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அரூர் வட்ட தலைவர் ஞானமூர்த்தி, செயலாளர் மாது ஆகியோர் தலைமை வகித்தனர்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரிசி, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட குடிமை பொருட்களில் இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி பில் கண்டறியப்பட்டால், தொடர்புடைய பணியாளர்களிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தன்னை அறியாமல் செய்த சிறு தவறுகளுக்கு கூட, அதிகளவில் அபராதம் விதிக்கப்படும் நிலையுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் தவிர்த்தும், காலவதியாகி விட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களே பொருட்களை திரும்ப எடுத்து கொள்ள, சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.
தற்போது புதிதாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் தேர்வு செய்வதற்கு முன்பாக, ஏற்கனவே பணியிலுள்ள பணியாளர்களை, அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு பணியிட மாறுதல் செய்த பின், காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, கூறினர்.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியிலும் மாவட்ட போராட்ட குழு செயலாளர் ராமராஜ் தலைமையில், ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.