/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவை - ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
/
கோவை - ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : நவ 28, 2025 02:21 AM
சேலம், கோவை - ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை - ஜெய்ப்பூர் சிறப்பு வார ரயில், டிச., 18, 25 ஆகிய வியாழனன்று அதிகாலை, 2:30 மணிக்கு, கோவையில் புறப்படும் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியே சனி மதியம், 1:25க்கு ஜெய்ப்பூரை அடையும். வியாழன் அதிகாலை, 4:05க்கு ஈரோடு, 5:10க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், டிச., 21, 28 ஆகிய ஞாயிறு இரவு, 10:05க்கு கிளம்பி, புதன் காலை, 8:30க்கு கோவையை அடையும். புதன் அதிகாலை, 3:50க்கு சேலம், 4:50க்கு ஈரோடு வந்து செல்லும். இதற்கான முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குகிறது.ரயில் நீட்டிப்பு
கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் மடார் ஜங்ஷன் வரை, சிறப்பு வார ரயில், டிச., 4 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பயணியர் இடையே வரவேற்பால், அந்த ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிச., 11, அதிகாலை, 2:30க்கு புறப்பட்டு, சேலம் வழியே டிச., 13 காலை, 11:30க்கு மடாரை அடையும். மறுமார்க்க ரயில், டிச., 14 இரவு, 11:50க்கு கிளம்பி, டிச., 17, காலை, 8:30க்கு கோவையை அடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

