/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீப்பெட்டி தொழிற்சாலையில் கலெக்டர் ஆய்வு
/
தீப்பெட்டி தொழிற்சாலையில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 04, 2025 01:19 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, தீப்பெட்டி தொழிற்சாலையில், விபத்து தடுப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார்.
பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, செயல்படுவதை தொடர் ஆய்வின் மூலம் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என, கலெக்டர் சதீஸ்
அறிவுறுத்தினார். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, தீப்பெட்டி தொழிற்சாலைகளில், விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., பெற்றிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல், ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது என, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், தர்மபுரி தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும்
அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.