அக்னிபாத்' வீரராக தேர்வு பெற்ற கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
அக்னிபாத்' வீரராக தேர்வு பெற்ற கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜன 22, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வே.முத்தம்பட்டியை சேர்ந்த குமாரசாமி, 21. இவர் தர்மபுரி அரசு கலைக்கல்-லுாரி இயற்பியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். என்.சி.சி., மாணவரான இவர் இந்திய ராணுவத்தில், 'அக்னிபாத்' ராணுவ வீர-ராக தேர்வு செய்யப்பட்டார்.
கல்லுாரி முதல்வர் கண்ணன், மாணவன் குமாரசாமிக்கு ராணு-வத்தில் சேருவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இதில், இயற்பியல் துறை தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு, 12 பட்டாலியன் ஜெய்மன்ஜோஸ், தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் தீர்த்தகிரி மற்றும் என்.சி.சி., மாணவர்கள், குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, வழி அனுப்பி வைத்தனர்.
