ADDED : ஜூன் 03, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஒன்னக்கரையை சேர்ந்தவர் வேடியப்பன், 42. கூலித்தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா, 19.
இவர், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள கல்லுாரியில், விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தார்.மாதம் ஒரு முறை, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மதியம், 3:00 மணியளவில் அவுட் பாஸ் வாங்கிக்கொண்டு கல்லுாரியில் இருந்து வெளியில் வந்தவர், வீட்டிற்கு வரவில்லை என்றும், இதில் கஞ்சனுார் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் அஜய், 19, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், கீர்த்தனாவின் தந்தை வேடியப்பன், நேற்று பொம்மிடி போலீசில் புகார் செய்தார். அதன் படி போலீசார் விசாரிக்கின்றனர்.
