/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தடகள போட்டிகளில் பதக்கம் கல்லுாரி மாணவியருக்கு பாராட்டு
/
தடகள போட்டிகளில் பதக்கம் கல்லுாரி மாணவியருக்கு பாராட்டு
தடகள போட்டிகளில் பதக்கம் கல்லுாரி மாணவியருக்கு பாராட்டு
தடகள போட்டிகளில் பதக்கம் கல்லுாரி மாணவியருக்கு பாராட்டு
ADDED : டிச 19, 2024 01:02 AM
தர்மபுரி, டிச. 19-
சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான, தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி மாணவியரை, கல்லுாரி முதல்வர் கண்ணன் பாராட்டினார்.
சேலம், பெரியார் பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான, மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான தடகள போட்டி டிச., 9-, 10 ஆகிய இரு தினங்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் நடந்தது. இதில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை, 3ம் ஆண்டு மாணவி கார்த்திகா, 100 மீ., ஓட்ட போட்டி மற்றும், 200 மீ., ஓட்டப் போட்டியில், 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இளம் அறிவியல் தாவரவியல் துறை, 3ம் ஆண்டு மாணவி ஷாலினி,- 10,000 மீ., ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கமும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பாக, அண்மையில் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில், 5,000 மீ., ஓட்ட போட்டியில், 3ம் இடமும் பிடித்தார்.
பதக்கம் வென்ற மாணவியரை, கல்லுாரி முதல்வர் கண்ணன், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவுரவ விரிவுரையாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்
பாராட்டினர்.

