/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாள்'
/
'உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாள்'
'உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாள்'
'உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாள்'
ADDED : ஜன 28, 2025 06:36 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் கடந்த, 2022-ல் தடையை மீறி, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தொடர்பாக, பா.ஜ., மாநில துணை தலைவர் ராமலிங்கம் உட்பட கட்சியினர் மீது, தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக தர்மபுரிக்கு நேற்று ராமலிங்கம் வந்தார்.
முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறியதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்திய நாள், ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாள். பாலின வேறுபாடு அற்ற, நிலையை உருவாக்குவது தான் பொது சிவில் சட்டம். மதம், ஜாதிக்கு என பாகுபாடின்றி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான இந்த சட்டம், உத்தரகாண்ட் மாநிலத்தை போல், தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். வாக்கு வங்கிக்காக முதல்வர் ஸ்டாலின் போராடுவதெல்லாம் வெளிவேஷ நாடகம்.
வேங்கை வயல் விவகாரத்தில், தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. இதில் சி.பி.ஐ., விசாரணை கோரியிருப்பதை, பா.ஜ., வரவேற்கிறது. அதே சமயம், தி.மு.க., அரசை அகற்ற, மா.கம்யூ., - வி.சி., கட்சிகள் எதிரணியில் இருக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் கோரிக்கை. தமிழகம் இன்று, நீரு பூத்த நெருப்பாக இருந்தாலும், என்றைக்கும் தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்து விட முடியாது. மத்திய அரசு பணியாளர்களுக்கு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் மாநில அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

