ADDED : பிப் 13, 2026 08:00 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிப்பட்டி அண்ணா திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சத்யா முன்னிலை வகித்தார். அலுவலக மேற்பார்வையாளர் நீலா வரவேற்றார். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த, 108 கர்ப்பிணிகளுக்கு, 21 சீர்வரிசை வளைகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மேற்பார்வையாளர்கள் நீலா, கலா, சாந்தி, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
