/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழியக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு போட்டி
/
தமிழியக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜன 13, 2025 02:32 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழியக்கத்தின் சார்பில், தமிழர் திருநாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட கல்லுாரி மாணவர்களிடையே பேச்சு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள், தர்மபுரி மாதர் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
தமிழியக்கத்தின் மாவட்ட பொருளாளர் நரசிம்மன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் அதியமான் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பழனி முன்னிலை வகித்தார்.போட்டி நடுவர்களாக எழுத்தாளர் உதயசூரியன், கவிஞர் மோகி வெங்கடேசன் மற்றும் பேச்சாளர் நாகராஜ் இருந்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கல்லுாரிகளில் இருந்து மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்க-ளுக்கு, சான்றிதழ் மற்றும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் பிறைசூடன் நன்றி கூறினார்.