/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளியில் இருந்த 7 மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்ததாக புகார்

ADDED : அக் 30, 2024 06:44 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியிலுள்ள, அவ்வையார் அரசு பெண்கள் பள்ளியில் இருந்த, 7 மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தது குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி டவுன், திருப்பத்தூர் சாலையில், அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதியில், 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பள்ளி சுற்றுச்சுவரையொட்டி, சர்ச் உள்ளது. பள்ளியிலுள்ள மரக்கிளைகள் முறிந்து அவ்வப்போது சர்ச் மீது விழுந்து, கூரை சேதம் ஏற்படுவதாக, சர்ச்சில் உள்ளவர்கள், தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரியிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி, சர்ச் கட்டடம் மீது படர்ந்துள்ள, 7 மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டி அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், நேற்று காலை, 10 பேர் கொண்ட கும்பல் பள்ளி சுற்றுச்சுவர் அருகே இருந்த, 7 மரங்களை அடியோடு வெட்டி சாய்த்தனர். இது குறித்து, தகவலறிந்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, ஆர்.டி.ஓ., காயத்ரி, தர்மபுரி தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.