ADDED : மே 02, 2025 01:15 AM
அ நிறம் | அளவு
பேரிகைகிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 59. பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தார்; கடந்த, 27 மதியம், 12:30 மணிக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.
அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். பேரிகை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரிக்கிறார்.
