நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்
நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 22, 2026 06:05 AM

தர்மபுரி; தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தமிழ்நாடு மாநில சமரச மற்றும் இணக்கமுறை மையத்தின் வழிகாட்டுதல்படி, சமரச வாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி சுதா முகாமை தொடங்கி வைத்தபின், சமரச வாரம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்க-ளுக்கு வழங்கினார்.தொடர்ந்து, தர்மபுரி சிறப்பு நீதிமன்ற வளா-கத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் தம-யந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட சிறப்பு சார்பு நீதிபதி விபிசி, சமரச மைய வக்கீல்கள் ராஜேந்-திரன், ராஜு, அருள்ஜோதி, ஜானகிராமன் மற்றும் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மற்றும் தாலுகா அளவில் செயல்படும் சமரச மையங்களில், வழக்குதாரர்கள் தங்கள் வழக்குகளுக்கு சமரச தீர்வை பெறலாம். சமரச மையம் மூலம் கிடைக்கும் சுமுக தீர்வு இறுதியா-னது. மேல் முறையீடு கிடையாது.
சமரச தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதி-மன்ற கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலவச சட்ட சேவையை வழக்குதாரர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
