/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்சில் பயணிகளிடம் பணம் பெற்றும் டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் திடீர் மாயம்
/
அரசு பஸ்சில் பயணிகளிடம் பணம் பெற்றும் டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் திடீர் மாயம்
அரசு பஸ்சில் பயணிகளிடம் பணம் பெற்றும் டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் திடீர் மாயம்
அரசு பஸ்சில் பயணிகளிடம் பணம் பெற்றும் டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் திடீர் மாயம்
ADDED : ஜூன் 07, 2025 01:05 AM
ஓசூர், பெங்களூருவில் இருந்து ஓசூர் வந்த அரசு பஸ்சில், பயணிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் மாயமானதால், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தேன்கனிக்கோட்டைக்கு நேற்று அரசு பஸ் புறப்பட்டது. மொத்தம், 40 பயணிகள் இருந்தனர். பயணிகளிடம் டிக்கெட்டிற்கு பணத்தை வாங்கிய கண்டக்டர், டிக்கெட் கொடுக்கவில்லை. பயணிகள் கேட்டபோது, மிஷின் பழுதாகி இருப்பதாக கூறி விட்டார்.
ஓசூர் வந்து இறங்கிய பயணி ஒருவர், டிக்கெட் வேண்டும் எனக்கேட்ட போது, கண்டக்டர் கொடுக்காததால், அங்கிருந்த போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதனால் அதிகாரிகள் விசாரித்தபோது, கண்டக்டர் திடீரென அங்கிருந்து மாயமானார்.
அவர் எங்கு சென்றார் என்பது தெரியாத நிலையில், ஓசூர் டவுன்
போலீசில் பஸ் டிப்போ அதிகாரிகள், கண்டக்டர் பணம் மற்றும்
டிக்கெட்டுடன் மாயமாகி விட்டதாக புகார் செய்ய சென்றனர். 'கண்டக்டர் மாயமானதாக கூறுவதால், ரத்த சொந்தம் தான், புகார் செய்ய வேண்டும். துறை ரீதியான விசாரணை நடத்தி, கண்டக்டர் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள்' என, போலீசார் அறிவுறுத்தி, அதிகாரிகளை அனுப்பினர்.
இது குறித்து, பஸ் டிப்போ அதிகாரி ஒருவர் கூறுகையில்,'மாயமான கண்டக்டரிடம் பயணிகளுக்கு வழக்கமாக வழங்கும் டிக்கெட்டும், மிஷின் மூலமாக டிக்கெட் வழங்கவும் வசதி
இருந்தது.
ஆனால், பயணிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு, அவர் டிக்கெட் வழங்கவில்லை என்ற புகார் வந்தது. அதன்படி அவரிடம் விசாரித்த நிலையில் மாயமாகி விட்டார். துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது' என்றார்.