/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 24, 2025 12:55 AM
ஓசூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 880 மாணவ, மாணவியர் படித்து
வருகின்றனர்.
கடந்த, 14 மற்றும் 15 தேதிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஓசூர் முத்துராயன் ஜி.பி., துவக்கப்பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஆர்.வி., மேல்நிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.
ஒன்றிய அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 10 மாணவ, மாணவியருக்கு, பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.