/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்டத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
/
மாவட்டத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 27, 2024 01:22 AM
கரூர், நவ. 27-
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அலுவலர்கள் அனைவரும் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஆண்டுதோறும் நவ.,26ம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படுவோம் என, அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வது வழக்கம். அதன்படி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அரசிலயமைப்பு சட்ட உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கோவக்குளத்தில் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை
வகித்தார்.
நிகழ்ச்சியில், நமது நாட்டின் அரசியலமைப்பு சட்ட உறுதி மொழி ஏற்பு பற்றி பேசப்பட்டது. மேலும் சட்ட உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கரூர் கிழக்கு மாவட்ட செயலர் சக்திவேல், மண்டல செயலர் தமிழாதன், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், தி.மு.க., வக்கீல்கள் அணி சார்பில், 75ம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அரசு வக்கீலும், வக்கீல்கள் சங்க தலைவருமான சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.
முன்னாள் அரசு வக்கீல் கலைச்செல்வன், அரசு வக்கீல் நீலமேகம் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் கலந்து கொண்டார். உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் மூத்த வக்கீல் கலைச்செல்வன் உறுதிமொழி வாசிக்க, வக்கீல்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
* புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் தலைமை வகித்தார். நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.