ADDED : ஏப் 26, 2026 05:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்களின் முகவர்களுடன், ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.
இதில் ஓட்டுச்சாவடி மையங்களில் பழுதான ஓட்டு இயந்திர விபரங்கள், மாற்றி அமைக்கப்பட்ட ஓட்டு இயந்திர எண்ணிக்கை, தொகுதியில் மொத்த ஓட்டுகள், பதிவான ஓட்டுகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து வேட்பாளர்களிடம் ஓட்டு என்னும் நாளில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து பேசினார்.
வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, எத்தனை டேபிள்கள் அமைக்கப்பட உள்ளது. எத்தனை சுற்றுகள் ஓட்டுக்கள் எண்ணிக்கை உள்ளது. ஒவ்வொரு டேபிளுக்கும் எத்தனை பேர் வரவேண்டும் என, முகவர்களிடம் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் பார்வதி, தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
