தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விபத்தில் சமையல் மாஸ்டர் பலி

விபத்தில் சமையல் மாஸ்டர் பலி

விபத்தில் சமையல் மாஸ்டர் பலி


ADDED : செப் 10, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம், காரிமங்கலம் அடுத்த கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன், 35. சமையல் மாஸ்டர். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு கடந்த, 7 மாதங்களுக்கு முன் திருமணமானது. பூவரசன் தன் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முரளி, 30, சின்னசாமி, 30, ஆகியோருடன் ராயல் என்பீல்டு பைக்கில் நேற்று மாலை, 3:30 மணிக்கு காரிமங்கலம் நோக்கி சென்றார்.

தர்மபுரி- - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையான கெரகோடஹள்ளி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த சரக்கு லாரியின் பின்பக்கம் பைக் மோதியது. இதில், பைக்கை ஓட்டி வந்த பூவரசன், பலத்த காயமடைந்து பலியானார். முரளி, சின்னசாமி படுகாயமடைந்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us