/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., பேரூராட்சி சேர்மçªçனை பதவி நீக்கம் செய்யக்கோரி கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு

ADDED : நவ 25, 2025 01:51 AM
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, தி.மு.க., டவுன் பஞ்., சேர்மன் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., கவுன்சிலர்கள், மாவட்ட கலெக்டர் சதீஸை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த, 2020ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 13 இடங்களில் தி.மு.க.,வும், வி.சி., மற்றும் காங்., தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த மாரி, பேரூராட்சி சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல், தன் விருப்பம் போல் செயல்படுவதாக, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். கடந்த, 17ம் தேதியன்று பேரூராட்சி சேர்மன் மீது, தி.மு.க., உட்பட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனுக்கொடுத்தனர்.
அதை தொடர்ந்து, மாரியை சேர்மன் பதவி யில் இருந்து நீக்க வலியுறுத்தி, தி.மு.க., கன்சிலர்கள் உட்பட, 10 கவுன்சிலர்கள் நேற்று, மாவட்ட கலெக்டர் சதீஸை சந்தித்து, 'அபிடவிட்' அளித்தனர்.