/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எதிர் திசையில் டூவீலர் சென்று அரசு பஸ் மோதி தம்பதி காயம்
/
எதிர் திசையில் டூவீலர் சென்று அரசு பஸ் மோதி தம்பதி காயம்
எதிர் திசையில் டூவீலர் சென்று அரசு பஸ் மோதி தம்பதி காயம்
எதிர் திசையில் டூவீலர் சென்று அரசு பஸ் மோதி தம்பதி காயம்
ADDED : நவ 26, 2025 02:12 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் திருப்பதி, 29. இவர் மனைவி பிரபா, 23. திருப்பதி டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழில் செய்து வருகிறார். மனைவி பிரபா கடந்த, 10 நாட்களுக்கு முன், தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிக்கு சேர்ந்தார். நேற்று காலை, 11:30 மணிக்கு தம்பதி இருவரும் அவர்களுடைய டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரில் தர்மபுரி பென்னாகரம் சாலையில் எதிர் திசையில், தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பிற்கு, சிக்னலை கவனிக்காமல் வந்தனர்.
அப்போது, தர்மபுரி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு புறநகர் பஸ், நான்கு ரோடு பகுதியில் எதிரில் வந்த ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

