/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையால் பயிர் சேதம்; அதிகாரிகள் ஆய்வு
/
மழையால் பயிர் சேதம்; அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 06, 2024 07:55 AM
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பெஞ்சல் புயலால் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கி நெல், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மஞ்சள், வாழை பயிர்கள் சேதமடைந்தன. தர்மபுரி தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா தலைமையில், தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி, தோட்டக்கலை அலுவலர் ஆர்த்தி, உதவி தோட்டக்கலை அலுவலர் தண்டாயுதம் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அரூர் லிங்காபுரம், கல்லடிப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, கொக்கரப்பட்டி, மாலகபாடி உள்ளிட்ட கிராமங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, மஞ்சள் மற்றும் தக்காளி வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பயிர்கள் சேதம் அடைந்திருந்தால், விவசாயிகள் தங்களுடைய பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க அறிவுறுத்தினர்.