/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
/
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
ADDED : டிச 09, 2024 07:46 AM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி பஞ்., உட்பட்ட கோம்பேரி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழை, மஞ்சள், சோளம், ராகி, கரும்பு மற்றும் வெற்றிலை தோட்டம் என விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்திருந்தனர்.
கடந்த வாரம் பெய்த கனமழையால், கோம்பேரியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், ராகி, சோளத் தோட்டங்களில் மழை வெள்ளம் புகுந்து தண்ணீர் தேங்கியதால், அனைத்து பயிர்களும் அழுகி வருகின்றன. இது குறித்து, தகவல் அளித்தும், வேளாண் துறை அதிகாரிகள் இதுவரை சேதம் குறித்து பார்வையிட வரவில்லை. பாதிப்புகளை கணக்கீடு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.