ADDED : செப் 23, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில், மக்கள் விரதமிருந்து தங்கள் குலதெய்வ மற்றும் பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதனால், புரட்டாசி மாதம் முடியும் வரை அசைவ உணவை அவர்கள் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அரூரிலுள்ள கடைகளில், அதிகளவில் அசைவ பிரியர்கள் வராததால், ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் இறைச்சி விற்பனை வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்-தனர். மேலும், புரட்டாசி மாதம் என்பதால், தடுப்பணையில் மீன் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.