/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கனமழையில் சேதமான தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
/
கனமழையில் சேதமான தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
கனமழையில் சேதமான தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
கனமழையில் சேதமான தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
ADDED : நவ 14, 2025 02:11 AM
அரூர், அரூர் அருகே, கன மழையின் போது தடுப்பணைகள் சேதம் அடைந்துள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், வள்ளிமதுரை முதல், அரூர் அம்பேத்கர் நகர் வரையிலான வரட்டாறு, 20 கி.மீ., துாரம் கொண்டதாகும். இந்த வரட்டாற்றில் கெளாப்பாறை முருகர் கோவில், எல்லப்புடையாம்பட்டி சுடுகாடு ஆகிய இடங்களில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், தடுப்பணைகள் கட்டப்பட்டன.
இந்த தடுப்பணைகள் மூலம், எல்லப்புடையாம்பட்டி மற்றும் கெளாப்பாறை கிராமங்களில், குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை. மேலும், அருகிலுள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால், பல ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் சாகுபடி நடந்தது. இந்நிலையில், கடந்த அக்., 22 மற்றும் சமீபத்தில் பெய்த கனமழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது, கெளாப்பாறை, எல்லப்
புடையாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணைகள்
சேதமடைந்தன. இதனால், தற்போது, தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல், வரட்டாற்றில் வீணாக செல்கிறது.
இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைவ
தோடு, பாசனத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வரட்டாற்றில் கனமழையால் சேதமடைந்துள்ள தடுப்பணைகளை விரைந்து சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

