/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2011 12:02 AM
தர்மபுரி: ''ஆசிரியர்களை மதித்து, அவர்களை வாழ்கையின் வழிகாட்டியாக நினைத்து மாணவர்கள் வளரவேண்டும்,'' என மாணவர்களுக்கு கலெக்டர் லில்லி அறிவுரை வழங்கினார்.
தர்மபுரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில், விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள், 28 பேருக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் பேசியதாவது: ஆசிரியர் தினத்தில், மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களை மதித்து நடப்பது மற்றும் ஒழுக்க பண்புகளை வளர்க்க உறுதியடுத்துகொள்ள வேண்டும். சிறந்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை, வாழ்கையின் வழிகாட்டியாக மாணவர்கள் நினைத்து படிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புத்தியிலும், விளையாட்டிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களின் நலனில் கூடுதல் அக்கறை எடுத்து, சிறந்த பண்புகளை வளர்க்க உதவ வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள முக்கிய குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ்அகமது, தலைமையாசிரியர் ஸ்ரீதர், சமூக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் கணேசன், சச்சின் பிரண்ட்ஸ் கிளப் சிவா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.