/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
200 வருட குலதெய்வ வழிபாடு முறைப்படுத்த கோரி தர்ணா
/
200 வருட குலதெய்வ வழிபாடு முறைப்படுத்த கோரி தர்ணா
ADDED : பிப் 11, 2025 07:19 AM
தர்மபுரி: பாலக்கோடு, புதுார் மாரியம்மன் கோவிலில், 200 ஆண்டுகால குலதெய்வ வழிபாட்டை
முறைப்படுத்தக்கோரி, கலெக்டர் அலு-வலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார்
சமா-தானம் செய்து, கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.
அந்த மனுவில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில், புதுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 200 ஆண்டுக்கு
மேலாக கோவில் திரு-விழா கொண்டாடி வருகிறோம். பல ஆண்டுகளாக, 5 குடும்-பத்தை
சேர்ந்தவர்களின் கரகங்கள் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து, கருவறையில் வைத்து
வழிபடுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா பிப்., 10 முதல், 15 வரை நடக்கிறது. இதில், பழைய
மரபுகளை மீறி, புதிதாக ஒரு கரகத்தை கோவிலில் வைக்க பிரச்னை செய்து வருகின்றனர். இது குறித்து,
பாலக்-கோடு போலீசார் நேற்று முன்தினம் எங்களை அழைத்து, உங்களு-டைய கரகத்தை
வைக்கக்கூடாது என மிரட்டினர். எங்களின், 200 ஆண்டு வழிபாட்டு உரிமையை
நடைமுறைப்படுத்தி, போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

