/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
40 ஆண்டாக துார்வாராத தும்பலஹள்ளி அணை வாய்க்கால்களை சீரமைக்க தீர்மானம்
/
40 ஆண்டாக துார்வாராத தும்பலஹள்ளி அணை வாய்க்கால்களை சீரமைக்க தீர்மானம்
40 ஆண்டாக துார்வாராத தும்பலஹள்ளி அணை வாய்க்கால்களை சீரமைக்க தீர்மானம்
40 ஆண்டாக துார்வாராத தும்பலஹள்ளி அணை வாய்க்கால்களை சீரமைக்க தீர்மானம்
ADDED : செப் 02, 2025 01:30 AM
காரிமங்கலம்:தும்பலஹள்ளி அணையின் வாய்கால்கள், 40 ஆண்டுகளாக துார்வாரபடாமல், முட்புதர்கள் மண்டி கிடப்பதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் தும்பலஹள்ளி அணையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.
இதில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவிலுள்ள, தும்பலஹள்ளி அணைக்கு மழைக்கால உபரிநீர் கொண்டு வரும் திட்டமான, கிருஷ்ணகிரி எண்ணேகோல்புதுார் தென்பெண்ணையாற்றில் இருந்து வறண்ட பகுதிகளுக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை, 2026க்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தும்பலஹள்ளி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் கடந்த, 40 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது.
அதிலுள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தி, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். பாலக்கோடு தாலுகா, எலங்காபட்டி ஏரியில் இருந்து, பூமாத்தனஹள்ளி ஏரி வரையிலான, நீர்வழி பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரண்டஹள்ளி அருகேவுள்ள, துாள்செட்டி ஏரிக்கு, கெலவரப்பள்ளி அணைக்கட்டில் இருந்து, ராயக்கோட்டை வழியாக, மழைக்கால உபநீர் திட்டத்தை, தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் பெற்ற வேளாண் வங்கி கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.