/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மான் வேட்டை: 2 பேருக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம்
/
மான் வேட்டை: 2 பேருக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம்
ADDED : நவ 29, 2025 01:14 AM
அரூர், மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் உத்தரவின்படி, வனவர்கள் பவித்ரா, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்குமார், அர்ச்சனா, வனக்காவலர் லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த, 26 காலை ஜங்கல்வாடி காப்புக்காடு, செல்லம்பட்டி வனக்காவல் சுற்றுக்கு உட்பட்ட முத்தானுார் வேங்கியாம்பட்டியை சேர்ந்த ஏழுமலை, 27, என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 10 கிலோ மான் இறைச்சி, அதன் தலை, வெட்டு கத்தி, 2, மற்றும் ஒரு கள்ள நாட்டு துப்பாக்கி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், ஏழுமலையிடம் விசாரித்தனர்.
அதில், வேங்கியாம்பட்டியை சேர்ந்த தங்கமணி என்பவருடன் சேர்ந்து, மானை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து ஏழுமலை, தங்கமணி ஆகிய இருவரையும் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவருக்கும் தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

