ADDED : ஜூன் 09, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை; ஊத்தங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகு-தியில், மான் இறைச்சி விற்பதாக ரகசிய தக-வலின் படி, வனவர்கள் சுபாஷ், நாராயணன் தலைமையிலான வனத்துறையினர், கொண்டம்-பட்டி புதுார் ஏரிக்கரையில் சோதனை மேற்-கொண்டனர்.
அப்போது, 12 கிலோ மான் இறைச்சி மற்றும் மான் தலையை விற்பனைக்கு வைத்தி-ருந்த திப்பம்பட்டியை சேர்ந்த தண்டபாணி, 24, என்பவரை கைது செய்து, மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, கொண்டம்பட்டி புதுாரை சேர்ந்த விஜய், 24, மற்றும் திப்பம்பட்டியை சேர்ந்த முருகன், 22, ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
