தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மேம்பாலத்தில் பழுதான அரசு பஸ் போக்குவரத்து நெரிசலால் அவதி

மேம்பாலத்தில் பழுதான அரசு பஸ் போக்குவரத்து நெரிசலால் அவதி

மேம்பாலத்தில் பழுதான அரசு பஸ் போக்குவரத்து நெரிசலால் அவதி


ADDED : மார் 31, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி டவுன் குமாரசாமி

பேட்டை மேம்பாலத்தில், அரசு டவுன் பஸ் நடுரோட்டில் பழுதாகி நின்றதால், பயணிகள் அவதி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தர்மபுரியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் பிப்., 5 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து, கிருஷ்ணகிரி, சேலம், பென்னாகரம், பாலக்கோடு, பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பஸ்கள், நேரடியாக தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக வந்து செல்கின்றன.

அதேபோல், அரூர், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் மட்டும், தர்மபுரி பழைய புறநகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்று வருகின்றன. இதில், பயணிகள் வசதிக்காக புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழை பஸ் ஸ்டாண்டிற்கு அரசு டவுன் பஸ்கள், தனியார் மினி பஸ்கள் இயக்கபடுகின்றன.

நேற்றிரவு, 8:00 மணிக்கு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த டவுன் பஸ் ஒன்று, குமார

சாமிபேட்டை மேம்பாலத்தில் பழுதாகி நின்றது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியாததால், பாலத்தின் மேலே பஸ்சை நிறுத்தி வைத்து பழுதை சரிசெய்தனர். இதனால், தர்மபுரி - பென்னாகரம் சாலையில், அரை மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us