/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
500 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வலியுறுத்தல்
/
500 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2025 03:55 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில், பல்வேறு குறைகள் குறித்து விவசாயிகள் பேசியதாவது:விவசாயிகளுக்கு பருவ சாகுபடி, பயிர்களுக்கான காப்பீடு குறித்த தகவல்களை அதிகாரிகள் முறையாக தெரிவிப்பதில்லை. மலை அடிவார பகுதிகளில் காட்டுப்பன்றி, காட்டெருமை தொல்லை அதிகரித்து வருவதால், அங்குள்ள விவசாயிகள் பாக்கு விவசாயத்-திற்கு மாறி வருகின்றனர். அரூர் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்குவதை தடுக்க வேண்டும். பூக்கள் சாகுபடி செய்யும் விவ-சாயிகள், மின்விளக்கு அமைத்து விவசாயம் செய்ய, மின் இணைப்பு பெரும்பட்சத்தில் ஒரு யூனிட்டுக்கு, 10 ரூபாய் கட்-டணம் நியமிக்கப்படுகிறது. அதை, 6 ரூபாயாக குறைத்து வழங்க வேண்டும்.
பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு, 500 யூனிட் மின்சாரம் மானிய-மாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் கரும்பு பயிரிட்டு, மூன்று மாதம் ஆன பிறகும், அவர்களுக்கான கூட்டு-றவு கடன் வழங்க அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். மா கொள்முதலை தனியார் மாங்கூழ் நிறுவனங்கள் நிறுத்திய நிலையில், அரசு சார்பில் தொழிற்சாலை தொடங்கி, பள்ளி மாண-வர்களுக்கு மினி பேக்கில் தினமும் ஜூஸ் ஆக, அரசு கொள்-முதல் செய்து வழங்கலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு, 53 லட்சம் பாக்கெட்டுகள் விற்பனையாகும். ஹிந்து சமய அறநிலை-யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில் நிலங்களை விவசாயிக-ளுக்கு குத்தகைக்கு விட வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியம் எச்-சனஹள்ளி பஞ்., விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
மாவட்ட கலெக்டர் சதீஷ் பதிலளித்து பேசியதாவது:
நீர் பாசன திட்டங்கள் குறித்து, அரசு ஏற்கனவே ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகா-ரிகள் விவசாயிகளுக்கு மரியாதை கொடுத்து, செயல்பட வேண்டும். அதேபோல், அரசு வழங்கும் திட்டங்களுக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நேரடியாக என்னிடம் கூறுங்கள். பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மின் கட்டணம் குறைப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். அரசின் மானிய திட்டங்களுக்கு, எந்த ஒரு அரசியல்வாதியின் சிபாரிசு கடிதமும் தேவையில்லை.
இவ்வாறு பேசினார்.