தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை

சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் :அரூர் அடுத்த, டி.அம்மாபேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் செய்து தர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள

இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்

இருந்து, 30,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆற்றிலுள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கதையாக உள்ளது.

மேலும், இங்கு பலியிடப்படும் ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவுகளை அகற்றாமல், துர்நாற்றம் வீசி வருகிறது.

எனவே, சென்னியம்மன் கோவிலுக்கு வருபவர்களுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம்

நடவடிக்கை எடுக்க, பக்தர்கள்

கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us