/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
/
சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : அக் 23, 2024 01:31 AM
சுகாதார வளாகத்தை
சீரமைக்க கோரிக்கை
இண்டூர், அக். 23-
தர்மபுரி அடுத்த, இண்டூர் பஞ்.,க்கு உட்பட்ட பாவாடி தெருவில், 150க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 6.90 லட்சம் மதிப்பில், குழியலறை மற்றும் கழிவறையுடன் கூடிய ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
பஞ்., நிர்வாகத்தின் பராமரிப்பின்மை காரணமாக, சுகாதார வளாகம் புதர் மண்டி கிடக்கிறது. தற்போது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சுகாதார சீர்கேட்டால் நோய் பரவல் ஏற்படுவதை தடுக்க, ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.