/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை
/
பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை
பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை
பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை
ADDED : நவ 15, 2024 02:15 AM
பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில்
கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 15---
கடத்துார் ஒன்றியத்தில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியில், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என, குருமன்ஸ் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியத்தில் நத்தமேடு, பழைய புதுரெட்டியூர், புட்டி ரெட்டிப்பட்டி, சிவனஹள்ளி உள்ளிட்ட, 12 பஞ்.,களில் குருமன்ஸ் எனும் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் அரசு அதிகாரிகள் வருவதில்லை, அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில்லை.
மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் இம்மக்களுக்கு சென்று சேர்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று, 15ல் நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை, குருமன்ஸ் இன மக்கள் அதிகம் வாழும் கிராமங்களில் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, நேற்று கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., கலைச்செல்வியிடம், குருமன்ஸ் பழங்குடி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.