/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை
/
சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை
ADDED : மார் 09, 2026 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரில், திங்கட்கிழ-மையில் வாரச்சந்தை நடக்கிறது. கடை
வீதியிலிருந்து, பழையபேட்டை வாணியாறு பாலம் வரை, நடைபாதைகளில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகள் என, சிறு வியாபா-ரிகள் பலர் ஆக்கிரமித்து கொள்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், எந்நேரமும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதுடன், பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு ஆளாகின்-றனர். எனவே, சாலையோர கடைகளை ஒழுங்கு-படுத்துவதுடன், சந்தைக்கு ஒதுக்கிய இடத்தில் கடைகளை வைக்க நகராட்சி நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

