/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொம்மிடியில் ரயில்வே பாலம் அகலப்படுத்த வலியுறுத்தல்
/
பொம்மிடியில் ரயில்வே பாலம் அகலப்படுத்த வலியுறுத்தல்
பொம்மிடியில் ரயில்வே பாலம் அகலப்படுத்த வலியுறுத்தல்
பொம்மிடியில் ரயில்வே பாலம் அகலப்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 27, 2025 05:53 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில் பஸ், ஆம்புலன்ஸ் செல்ல முடி-யாத வகையில் உள்ள ரயில்வே பாலத்தை அக-லப்படுத்த வேண்டும்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், இரண்டு ரயில்வே பாலங்கள் உள்ளன. இதில், நடைமேடையின் கீழ் அமைந்-துள்ள பாலம் வழியாக விடிவெள்ளி நகர், ஒட்டுப்-பட்டி, பண்டாரசெட்டிப்பட்டி, திப்பிரெட்டிஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் பொம்மிடிக்கு அத்தியாவசிய தேவைக-ளுக்காக வந்து செல்கின்றனர். இந்த பாலம் வழி-யாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் செல்ல முடியும். கனரக வாகனங்கள், பஸ், ஆம்-புலன்ஸ் போன்றவை செல்ல முடியாது.பாலம் அருகே அரசு மகளிர் பள்ளி, அரசு மருத்து-வமனை உள்ளிட்டவை உள்ளன. அரசு மருத்துவ-மனைக்கு வரும் நோயாளிகள், 2 கி.மீ., துாரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் அவலம் உள்ளது. சிறிய பாலமாக உள்ளதால் இதன் வழி-யாக பஸ் போக்குவரத்து இல்லை.
இதனால் பள்ளி செல்லும் மாணவியர், மருத்துவ-மனை செல்லும் நோயாளிகள் நடந்து சென்று வரும் நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகி-றது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் செல்ல முடியாமல், 4 கி.மீ., சுற்றி செல்லும் அவலம் உள்ளது. எனவே, குறுகிய பாலத்தை அகலப்ப-டுத்த வேண்டும் என, இப் பகுதி மக்கள் எதிர்பார்க்-கின்றனர்.

