ADDED : ஆக 22, 2026 06:02 AM
தர்மபுரி; தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் சரவணன் தலை-மையில் நேற்று நடந்தது.
இதில் விவசாயிகள் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரம-ணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்குவதற்காக, பயிரிட்ட கரும்பு பயிர்கள், கடும் வறட்சி காரணமாக நீரின்றி காய்ந்துள்ளது. வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்-களை பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேர்ப்புழு தாக்குதலால் கரும்பு பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில், அரவை பருவம் தொடங்கும் போது, வேறு ஆலைகளிலிருந்து கரும்புகளை அர-வைக்கு கொண்டு வரலாம்.
விவசாயிகள் வங்கிகளில் கால்நடைகள் வாங்க பெற்ற கடன் மற்றும் பராமரிப்பு கடன் ஆகிய-வற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவர்களும் உரிய நேரத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்க-ளுக்கு செல்வதை உறுதிப்படுத்த, பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும். மாவட்-டத்தில், 35,000 மாடுகள் உள்ள நிலையில், 5,500 மாடுகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்-ளது.
பாலுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட, 3 ரூபாய் என்-பது போதுமானதாக இல்லை. பால் கொள்முதல் விலையை விவசாயிகள் கேட்டது போல பசும்-பாலுக்கு, 45 ரூபாய், எருமை பாலுக்கு, 60 ரூபாய் வழங்க வேண்டும். இந்த அறிவிப்பை அரசு அறி-விக்கவில்லையெனில் ஆவினுக்கு பால் வழங்-குவதை விவசாயிகள் நிறுத்தும் நிலைக்கு தள்-ளப்படுவர். வறட்சி காரணமாக அனைத்து பயிர்-களும் காய்ந்து விட்டதால், தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிக-ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன் பதி-லளித்து பேசுகையில், ''தர்மபுரி மாவட்டம் முழு-வதும் கரும்பு பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். கால்நடை மருத்துவர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இருப்பது கண்கா-ணிக்கப்படும். ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
