/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்
/
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : நவ 28, 2024 12:58 AM
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து
கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்
நல்லம்பள்ளி, நவ. 28-
நல்லம்பள்ளி அருகே, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 7 வீடுகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளி பஞ்., உட்பட்ட கீழ்பூரிக்கல் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, 7 வீடுகள் கட்டப்பட்டதாக கூறி, அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் புறம்போக்கு நிலத்தில் கட்டிய, வீடுகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் கடந்த, 20 அன்று, 3 வீடுகளை இடித்து அகற்றி, மற்றவர்களுக்கு வீடுகளை காலிசெய்ய கால அவகாசம் வழங்கினர். நேற்று, 4 வீடுகள் இடித்து அகற்ற
பட்டன.
இதில், சம்மந்தபட்ட, 4 குடும்பத்தினர், குழந்தைகளுடன் தங்குவதற்கு இடமின்றி தவிப்பதாக, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து, மானியதஹள்ளி பஞ்., சமுதாயகூடத்தில், 4 குடும்பத்தினர் தங்குவதற்கு தற்காலிகமாக, வருவாய் துறையினர் ஏற்பாடு செய்தனர்.