ADDED : மே 25, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: பெட்ரோல், டீசல் விலையுர்வை கண்டித்து, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அழகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
இதில், பெட்ரோல்-, டீசல்- விலையை மூன்று முறை உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். சமையல் காஸ் விலையை வாபஸ் பெற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
