தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தனியாரிடம் துாய்மை பணியால் ஆர்ப்பாட்டம்

தனியாரிடம் துாய்மை பணியால் ஆர்ப்பாட்டம்

தனியாரிடம் துாய்மை பணியால் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 25, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில், துாய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை கைவிட, தமிழ்நாடு அரசை வலியு-றுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளாட்சி பணியாளர் சம்-மேளனம் தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செய-லாளர் மணி, துணைத்தலைவர் சுதர்சனன் ஆகியோர், பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் துாய்மை பணியை தனியாருக்கு விடும், தமிழ்நாடு அரசின் முடிவை கண்டித்து பேசினர்.ஆர்பாட்டத்தில், துாய்மை பணியாளர்கள் நிய-மனம், நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடி பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அத்தியாவசிய சேவையை, எந்த நிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக்கூடாது. துாய்மை பணியாளர்களின் உழைப்புக்கு மதிப்பும், பாது-காப்பும், உறுதி செய்ய, அரசே பொறுப்பேற்க

வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us