/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நார் மில்லை மூட வலியுறுத்தி கொடுமுடியில் ஆர்ப்பாட்டம்
/
நார் மில்லை மூட வலியுறுத்தி கொடுமுடியில் ஆர்ப்பாட்டம்
நார் மில்லை மூட வலியுறுத்தி கொடுமுடியில் ஆர்ப்பாட்டம்
நார் மில்லை மூட வலியுறுத்தி கொடுமுடியில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2024 01:45 AM
நார் மில்லை மூட வலியுறுத்தி
கொடுமுடியில் ஆர்ப்பாட்டம்
கொடுமுடி, நவ. 19-
கொடுமுடி அருகே இச்சிப்பாளையம் கிராமத்தில், காற்று மாசு ஏற்படுத்தி, குடிநீரை கெடுக்கும் நார் மில்லை துவங்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கொடுமுடி யூனியன் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட உதவி தலைவர் கனகவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாதப்பன், மூர்த்தி, சுமதி, பானுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நார் மில்லை துவங்கினால் காற்று மாசு ஏற்படும். நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும். எனவே நார் மில்லை நிரந்தரமாக மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதை தொடர்ந்து, பி.டி.ஓ.,வை சந்தித்த நிர்வாகிகள், நார்மில்லை துவங்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுசாமி, இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத்தலைவர் சிவலிங்கம் மற்றும் பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.